முதல் கிரிக்கெட் மேட்ச்....
venue : ஊர் கடைசீல ஒரு காலி இடம்.......
players :ப்ளேயர்ஸ் எங்க தெரு நண்பர்கள்.....
day : sunday
ஞாயிற்றுகிழமை லீவ்னா நாங்களே கிரிக்கெட் விளையாடறது போய் அந்த வாரத்துலர்ந்து மேட்ச் விளையாட ஆரமிச்சோம்....
அது வரைக்கும் எங்களுக்குள்ள விளையாடிட்டு இப்போ இன்னொரு டீம் கூட விளையாடபோறது கொஞ்சம் புதுசாதான் இருந்தது...
என் பிரெண்ட்தான் எங்க டீம்க்கு எப்பவும் கேப்டன்...... எங்க டீம்க்கும் வடிவேலுவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு...
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்.....அதாவது இப்போ இருக்குற இந்தியன் டீம் மாதிரி...பேட்டிங் ஸ்ட்ராங் பவுலிங் வீக்......
இருந்தாலும் வெளில சொல்லிக்காம நிலைமைய சரிகட்டிடோம்......நாங்க எல்லாரும் த்ரோ பண்ணியே கிரிக்கெட் விளையாண்டதுனால பவுலர்ஸ் எல்லாரும் சுமாராத்தான் பவுலிங் போடுவோம்....
முதல் மேட்ச்னாலயோ என்னவோ எங்க கேப்டன் டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தாரு...[அப்பாடா முதல்ல பவுலிங் பண்ணாம தப்பிச்சோம்...].......
வழக்கமா எங்க மேட்ச்ல நான்தான் ரன்னர் சைடு இறங்குவேன்....அன்னக்கி நான் ஒபெனிங் இறங்கலை....
அதுக்கு பதிலா ஒன்டவுன் இறங்க முடிவு பண்ணினேன்....அப்போ எனக்கு தெரிஞ்ச ஒரே ஷாட் கண்ண மூடிட்டு லெக்சைடுல பேட்ட சுத்துறது ..[இப்போ பேட்டிங் புடிச்சாலும் நாலு பால்க்கு ஒரு தடவையாவது அந்த ஷாட் ஆடுவேன்..]
வழக்கமா நெறைய ஓவர் வச்சுதான் மேட்ச் விளையாடுவாங்க..... நாங்களும் சிறுசு... க்ரவுண்டும் சிறுசு..... அதுனால ஓவரும் சிறுசாகிடுச்சு......
இருபது ஓவர்ன்னு முடிவு பண்ணி எங்க டீம் ஒபெனிங் நண்பர்கள பீல்ட் உள்ள இறங்க நாங்க பக்கத்துல[பெவில்லியன்ல]உக்காந்து பாக்க ரெடி ஆனோம்....
அப்டியே மெதுவா ஆரமிச்சாங்க.... ஓவரும் மெதுவா ஓடிச்சு... ரன் அத விட மெதுவா ஓடிச்சு......அஞ்சாவது ஓவர்ல முதல் விக்கெட் விழுந்துடுச்சு......
அப்பாடா நமக்கு சான்சுனு உள்ள இறங்கினேன்....எதோ முதல் பால்லயே சிக்சர் அடிக்கற சச்சின் மாதிரி உள்ள இறங்கியாச்சு....
இருந்தாலும் மூணு விஷயம் மனசுக்குள்ள ஓடீட்டுஇருந்துச்சு ...........
1.பவுலர்ட்ட அவுட் ஆககூடாது...
2.கேட்ச் அவுட் ஆககூடாது.....
இத எல்லாம் விட...
3.மிட்ஆன்ல முள் புதர்ல அடிச்சு அவுட் ஆக கூடாது....
அப்போ யோசிச்சது பந்தையே வெளிய தூக்கி அடிச்சு தொலைக்கறதுதான்...[மெயின் ரோடு தாண்டி அடிச்சிட்டா பந்து அவ்ளோதான்.....நமக்கு சிக்க்சரோ போரோ கிடைக்கும்...புது பந்துல பவுலிங் ஆரமிச்சுடுவாங்க....]
இவ்ளோ பிளான் பண்ணி உள்ள கிரீஸ்ல போய் நின்னா எனக்கு பௌலிங் போட ரெடி ஆனது பாஸ்ட் பவுலர்தான்...
இருந்தாலும் மனச திடபடுத்தி அடிச்சிடலாம்னு ஒரு தெம்பா ரெடி ஆகிட்டேன்.....
பவுலர் இருபது அடி ஓடி வந்து பவுலிங் போட்டாச்சு.....
இந்த பக்கம் நான் பேட்ட ஒரே சுத்து தான் சுத்தினேன்.....
என் அதிர்ஷ்டம்.....
பால் எங்கயும் படாம நேரா ஸ்டம்ப்ல தான் போய் பட்டுச்சு....
முதல் மேட்ச்லயே அழகான கோல்டன் டக் அவுட்....இருந்தாலும் கஷ்டமா இல்லை ஏன்னா எனக்கு அப்புறம் இறங்கறவங்க ரன் அடிப்பாங்கனு நம்பிக்கைதான்.....
அதே மாதிரி அடுத்து இறங்கின நம்ம நண்பர்களும் கொஞ்சம் கொஞ்சம் ரன் அடிச்சு அவுட் ஆனாங்க...கடைசில முடியும்போது எங்க டீம் ஸ்கோர் தொண்ணுற தாண்டிருச்சு....
சரி பவுலிங்க்ல பாத்துக்கலாம்னு விட்டுடோம்...எங்க டீம் பவுலிங்க பத்தி முன்னாடியே சொன்னதுனால ரிசல்ட் ஈசீயா கண்டுபிடிச்சிடலாம்.....
அப்போ என்கிட்டே இருந்த கெட்ட பழக்கம் பாஸ்ட் பௌலிங்னு சொல்லி ரெண்டாவது ஓவர் போடறது...
[அப்போ கொஞ்சம் ஓடி வந்து பவுலிங் போட்டேன்....
அது கொஞ்சம் கம்மியாகி ஸ்பின் பவுலிங் ஆச்சு....
இப்போ பவுலிங் போடறதே இல்லை....]....
அந்த மேட்ச்லயும் சளைக்காம நாலு ஓவர் போட்டேன்... ஆனா அந்த டீம்கிட்ட ஒன்னும் எடுபடலை...அவங்க ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க.....இருந்தாலும் நாங்களும் முதல் முதலா மேட்ச் விளையாடி நெறையா கத்துகிட்டோம்...
எங்களோட பேட்டிங்கும் பவுலிங்கும் நெறைய ப்ராக்டிஸ் பண்ணி மாத்தினோம்....நான் எனக்கு தெரிஞ்சு கடைசியா டக் அவுட் ஆனது அந்த மேட்ச்தான்னு நினைக்கறேன்...அதுக்கு அப்புறம் நான் ஊர்ல நடந்த மேட்ச்ல டக் அவுட் ஆனது இல்லை...இந்த முதல் மேட்ச் எனக்கு மட்டுமில்லாம எங்க டீம்க்கும் ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு.,..அதுக்கு அப்புறம் எல்லா வாரமும் மேட்ச் விளையாட ஆரமிச்சோம்....
அந்த அழகான மேட்ச்சுகளோட விவரம் அடுத்த போஸ்ட் ல..........
No comments:
Post a Comment