முதல் கிரிக்கெட் மேட்ச்....
venue : ஊர் கடைசீல ஒரு காலி இடம்.......
players :ப்ளேயர்ஸ் எங்க தெரு நண்பர்கள்.....
day : sunday
ஞாயிற்றுகிழமை லீவ்னா நாங்களே கிரிக்கெட் விளையாடறது போய் அந்த வாரத்துலர்ந்து மேட்ச் விளையாட ஆரமிச்சோம்....
அது வரைக்கும் எங்களுக்குள்ள விளையாடிட்டு இப்போ இன்னொரு டீம் கூட விளையாடபோறது கொஞ்சம் புதுசாதான் இருந்தது...
என் பிரெண்ட்தான் எங்க டீம்க்கு எப்பவும் கேப்டன்...... எங்க டீம்க்கும் வடிவேலுவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு...
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்.....அதாவது இப்போ இருக்குற இந்தியன் டீம் மாதிரி...பேட்டிங் ஸ்ட்ராங் பவுலிங் வீக்......
இருந்தாலும் வெளில சொல்லிக்காம நிலைமைய சரிகட்டிடோம்......நாங்க எல்லாரும் த்ரோ பண்ணியே கிரிக்கெட் விளையாண்டதுனால பவுலர்ஸ் எல்லாரும் சுமாராத்தான் பவுலிங் போடுவோம்....
முதல் மேட்ச்னாலயோ என்னவோ எங்க கேப்டன் டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தாரு...[அப்பாடா முதல்ல பவுலிங் பண்ணாம தப்பிச்சோம்...].......
வழக்கமா எங்க மேட்ச்ல நான்தான் ரன்னர் சைடு இறங்குவேன்....அன்னக்கி நான் ஒபெனிங் இறங்கலை....
அதுக்கு பதிலா ஒன்டவுன் இறங்க முடிவு பண்ணினேன்....அப்போ எனக்கு தெரிஞ்ச ஒரே ஷாட் கண்ண மூடிட்டு லெக்சைடுல பேட்ட சுத்துறது ..[இப்போ பேட்டிங் புடிச்சாலும் நாலு பால்க்கு ஒரு தடவையாவது அந்த ஷாட் ஆடுவேன்..]
வழக்கமா நெறைய ஓவர் வச்சுதான் மேட்ச் விளையாடுவாங்க..... நாங்களும் சிறுசு... க்ரவுண்டும் சிறுசு..... அதுனால ஓவரும் சிறுசாகிடுச்சு......
இருபது ஓவர்ன்னு முடிவு பண்ணி எங்க டீம் ஒபெனிங் நண்பர்கள பீல்ட் உள்ள இறங்க நாங்க பக்கத்துல[பெவில்லியன்ல]உக்காந்து பாக்க ரெடி ஆனோம்....
அப்டியே மெதுவா ஆரமிச்சாங்க.... ஓவரும் மெதுவா ஓடிச்சு... ரன் அத விட மெதுவா ஓடிச்சு......அஞ்சாவது ஓவர்ல முதல் விக்கெட் விழுந்துடுச்சு......
அப்பாடா நமக்கு சான்சுனு உள்ள இறங்கினேன்....எதோ முதல் பால்லயே சிக்சர் அடிக்கற சச்சின் மாதிரி உள்ள இறங்கியாச்சு....
இருந்தாலும் மூணு விஷயம் மனசுக்குள்ள ஓடீட்டுஇருந்துச்சு ...........
1.பவுலர்ட்ட அவுட் ஆககூடாது...
2.கேட்ச் அவுட் ஆககூடாது.....
இத எல்லாம் விட...
3.மிட்ஆன்ல முள் புதர்ல அடிச்சு அவுட் ஆக கூடாது....
அப்போ யோசிச்சது பந்தையே வெளிய தூக்கி அடிச்சு தொலைக்கறதுதான்...[மெயின் ரோடு தாண்டி அடிச்சிட்டா பந்து அவ்ளோதான்.....நமக்கு சிக்க்சரோ போரோ கிடைக்கும்...புது பந்துல பவுலிங் ஆரமிச்சுடுவாங்க....]
இவ்ளோ பிளான் பண்ணி உள்ள கிரீஸ்ல போய் நின்னா எனக்கு பௌலிங் போட ரெடி ஆனது பாஸ்ட் பவுலர்தான்...
இருந்தாலும் மனச திடபடுத்தி அடிச்சிடலாம்னு ஒரு தெம்பா ரெடி ஆகிட்டேன்.....
பவுலர் இருபது அடி ஓடி வந்து பவுலிங் போட்டாச்சு.....
இந்த பக்கம் நான் பேட்ட ஒரே சுத்து தான் சுத்தினேன்.....
என் அதிர்ஷ்டம்.....
பால் எங்கயும் படாம நேரா ஸ்டம்ப்ல தான் போய் பட்டுச்சு....
முதல் மேட்ச்லயே அழகான கோல்டன் டக் அவுட்....இருந்தாலும் கஷ்டமா இல்லை ஏன்னா எனக்கு அப்புறம் இறங்கறவங்க ரன் அடிப்பாங்கனு நம்பிக்கைதான்.....
அதே மாதிரி அடுத்து இறங்கின நம்ம நண்பர்களும் கொஞ்சம் கொஞ்சம் ரன் அடிச்சு அவுட் ஆனாங்க...கடைசில முடியும்போது எங்க டீம் ஸ்கோர் தொண்ணுற தாண்டிருச்சு....
சரி பவுலிங்க்ல பாத்துக்கலாம்னு விட்டுடோம்...எங்க டீம் பவுலிங்க பத்தி முன்னாடியே சொன்னதுனால ரிசல்ட் ஈசீயா கண்டுபிடிச்சிடலாம்.....
அப்போ என்கிட்டே இருந்த கெட்ட பழக்கம் பாஸ்ட் பௌலிங்னு சொல்லி ரெண்டாவது ஓவர் போடறது...
[அப்போ கொஞ்சம் ஓடி வந்து பவுலிங் போட்டேன்....
அது கொஞ்சம் கம்மியாகி ஸ்பின் பவுலிங் ஆச்சு....
இப்போ பவுலிங் போடறதே இல்லை....]....
அந்த மேட்ச்லயும் சளைக்காம நாலு ஓவர் போட்டேன்... ஆனா அந்த டீம்கிட்ட ஒன்னும் எடுபடலை...அவங்க ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க.....இருந்தாலும் நாங்களும் முதல் முதலா மேட்ச் விளையாடி நெறையா கத்துகிட்டோம்...
எங்களோட பேட்டிங்கும் பவுலிங்கும் நெறைய ப்ராக்டிஸ் பண்ணி மாத்தினோம்....நான் எனக்கு தெரிஞ்சு கடைசியா டக் அவுட் ஆனது அந்த மேட்ச்தான்னு நினைக்கறேன்...அதுக்கு அப்புறம் நான் ஊர்ல நடந்த மேட்ச்ல டக் அவுட் ஆனது இல்லை...இந்த முதல் மேட்ச் எனக்கு மட்டுமில்லாம எங்க டீம்க்கும் ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு.,..அதுக்கு அப்புறம் எல்லா வாரமும் மேட்ச் விளையாட ஆரமிச்சோம்....
அந்த அழகான மேட்ச்சுகளோட விவரம் அடுத்த போஸ்ட் ல..........
Friday, June 11, 2010
Wednesday, June 9, 2010
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்னா எல்லாரும் சொல்ற மொதல் வார்த்தை ....... சச்சின்.....
எனக்கும் அப்படிதான் ..... சின்ன வயசுலர்ந்து ஒரு கிரிக்கெட் பைத்தியம்....[இன்னக்கும் அப்படிதான்]......
அது இந்தியா மேட்ச்னா மட்டும்மில்ல.....டிவில கென்யா விளையாடினாலும் பார்ப்பேன்.....
கிரிக்கெட் அவ்ளோ புடிக்கும்......சின்ன வயசுலர்ந்து சச்சின் விளையாடற எல்லா மேட்ச்சும் தவிர்க்காம
பார்ப்பேன் ..... கரண்ட் கட் ஆனாலும் ரேடியோல கமெண்டரியாவது கேக்கணும்...இல்லைனா தலையே வெடிச்சுடும்....
எனக்கு கொஞ்சம் நல்லா கிரிக்கெட் தெரிய ஆரமிச்சது வேர்ல்ட்கப் தான்...இங்கிலாந்த்ல நடந்தது....
எல்லாருக்கும் அப்போ சச்சின் அப்பா இறந்து போனது, உடனே சச்சின் இந்தியா வந்துட்டு திரும்பி மேட்ச் விளையாட போனது..
அப்போ சென்டுரி அடிச்சு அவங்க அப்பாக்கு அர்பணித்து நம்ம எல்லாருக்கும் சச்சின் மேல பெரிய மரியாதையை வந்துச்சு.......
.jpg)

Tuesday, June 8, 2010
சின்னவயசுல....கிரிக்கெட் விளையாட ஆரமிச்சபோது.......
சின்ன வயசுல...
சின்ன வயசுல நம்ம ஊர்ல நடந்தத விஷயங்கள நெனச்சா சூப்பரா இருக்கும்....என்னோட செட்ல இருபது பசங்களுக்கு மேல இருந்தோம்...எங்கள விட பெரிய பசங்க நிறையபேர் இருந்தாங்க...அவங்க நாற்பதுக்குமேல இருந்தாங்க.. அவங்கள பார்த்துதான் நாங்க வளர்ந்தோம்னுஒரு காரணம் சொல்லலாம்....அவங்கள மாதிரி வேலை செய்யவும் முடியாது... விளையாடவும் முடியாது....எங்களுக்கு கிரிக்கெட்ல முதல் ரோல்மாடல் அவங்கள தான் இருப்பாங்க...தெரு முடியற இடத்துல.. அதாவது கடைசி வீட்டுக்கு அடுத்தது காலி இடம் ஒன்னு இருக்கும்...அங்க காம்பவுண்ட் வால் மாதிரி இருக்கும்.. அதுதான் எங்களுக்கு பெவில்லியன்....சின்ன பசங்க எல்லாரும் அங்க உக்காந்து பெரியவங்க விளையாடறத பாப்போம்...எங்களுக்கு அங்க சான்ஸ் கிடையாது...ஏன்னா அவங்க செட்டுக்கு அப்புறம் ரெண்டாவது செட் இருந்தாங்க.. அவங்களுக்கு அப்புறம்தான் நாங்க...அதுனால வேடிக்கை பார்க்கறது மட்டும்தான் எங்க வேலை...நாங்க அவ்ளோ பெரிய கிரவுண்ட் காலியா இருந்தாலும் விளையாடமாட்டோம்...எங்களுக்கு ஒரு ஸ்டைல்..தெருவுக்குள்ள ரெண்டு எதிரெதிர் வீட்டுக்கு நடுவுலதான் எங்களோட கிரிக்கெட் நடக்கும் ...ரெண்டு பக்கமும் இருக்கற வீடு சுவத்துல செகப்பு வெள்ளை சுண்ணாம்புபட்டை தான் எங்க ஸ்டம்ப்.....ஒரு மேட்ச் ஆரமிச்சு முடிக்கறதுக்குள்ள பெரிய ரணகளம் ஆகிடும்....சில சமயம் ரெண்டு டீம்குள்ள சண்ட வந்து மேட்ச் நின்னுடும்.. பல சமயம் ரெண்டு வீட்டுல எதோ ஒரு வீடுலர்ந்து யாரோ ஒருத்தர் வந்து திட்டி மேட்ச்ச நிறுத்திடுவாங்க.....அப்போ பேட்டிங் புடிச்சவன்லாம்[நான் உட்பட] பயங்கர சந்தோசம் ஆகிடுவோம்...பேட்டிங் புடிக்காதவங்களுக்கு காதுல புகை வரும்.....பேட்டிங் டீம்ல இருக்கறவங்க முடிஞ்சா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணியும் பேசுவோம்...இது எல்லாம் இல்லாம ஒரு மேட்ச் நடந்துச்சுனா அன்னைக்கின்னு பார்த்து பேட்டிங் புடிக்க தெரியாதவன் அடிச்சாலும் பால் தொலைஞ்சுடும்.... இத்தனையையும் தாண்டி ஒரு மேட்ச் நடந்தா ஆச்சர்யம்தான்...ஆனா பெரியவங்க இந்த மாதிரிலாம் அனுபவிச்சாங்களானு தெரியலை..அவங்க விளையாடறதுக்கு அந்த காலி இடம் இருந்துச்சு... கொஞ்ச நாள்ல அங்க கல்யாண மண்டபம் கட்டிடாங்க...முழுசா இல்லாட்டியும் சுவர் மட்டும் எழுப்பி நிறுத்திடாங்க[இப்போ அந்த எடத்துல கல்யாண மண்டபம் நல்லாகட்டியாச்சு]...இந்த காரணத்துனால நாங்க அந்த எடத்துல விளையாடினது இல்ல...ஆனா பாதில இருந்த கல்யாண மண்டபம் பக்கத்துல நாங்களே ஒரு இடம் உருவாக்கி கிரிக்கெட் விளையாட ஆரமிச்சோம்..அந்த இடம் ரொம்ப சின்னதுதான் இருந்தாலும் நாங்க சின்னதா இருந்ததுனால அது எங்களுக்கு பெரிய இடம்...
கிரவுண்ட்ல பேட்டிங் ஸ்டம்ப் நிரந்தரமா எலெக்ட்ரிக் கம்பம்தான்...அது இன்னக்கும் [உடைஞ்சு விழாம] அங்கேயேதான் இருக்கு....
பௌலிங் சைடு ஸ்டம்ப் ஒரு பெரிய கல் இல்லைனா குச்சிதான் கெடைக்கும்..அத வச்சு நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்........
கிரவுண்ட் வட்டமா இல்லாட்டியும் ஒரு ஷேப்ல இருக்கும்...மிட் ஆன் , மிட் ஆப் ரெண்டு இடமும் கெடையாது..மிட் ஆன் ல முள் செடியா இருக்கும்....
எங்க கிரிக்கெட்க்கு முதல் ரூல்சே அந்த புதர்ல பால் அடிச்சா.. அடிச்ச பேட்ஸமேன்தான் அத போய்எடுத்துட்டு வரணும்..அது மட்டும் ரூல்ஸா இருந்த ஒண்ணுமில்ல...அங்க அடிச்சாலே அந்த பேட்ஸ்மேன் அவுட் தான்...அதுக்கு பயந்துட்டே அந்த புதர்ல யாரும் அடிக்க மாட்டோம்.... அதையும் மீறி ஒன்னு ரெண்டு பால் எட்ஜுல பட்டு போய்டும்... அதுக்கு பவுலர் உட்பட யாரும் பொறுப்பில்ல...மிட் ஆப் ல வீடு ஒன்னு இருக்கும்.. அதுனால அந்த பக்கமும் ரன் அடிக்க முடியாது..ஆப் சைடுல அப்புறம் லெக் சைடுல மட்டும்தான் ரன் அடிக்க முடியும்....இப்படி ஒரு அழகான க்ராவுன்ட்லதான் நான் முதல் மேட்ச் விளையாடினேன்...மேட்ச்னா எங்க தெரு பசங்களுக்கும் பக்கத்துக்கு தெரு பசங்களுக்கும் மேட்ச்...பெட்லாம் கெடையாது..இருந்தாலும் ஒரு எக்ஸ்சிபிஷன் மேட்ச் மாதிரி ஞாயிற்றுகிழமை விளையாடினோம்....அன்னக்கி நடந்த சுவாரஸ்யமான சம்பவம் அடுத்த போஸ்ட்ல பாக்கலாம்.....

i describe myself very short....
let me start off from the place i started.....
i born in a-kalayamputhur which is exactly 5 kms from palani.its a village normally called as agraharam kalayamputhur.my schooling happened in palani where i studied upto 10th std in st.joseph's matric hr sec school,then 11 and 12th at akshaya academy palani.
after that my graduation happened in rajalakshmi engineering college chennai.nice to stay in the hostel with friends for doing graduation...
so after my graduation got over i searched job but unfortunately i was not able to grab one for a looonnnnnngggggg time....but same time i started to do my m.b.a....
i shifted to chennai in 2002 for doing my b.e.....and its 2010 now i am going to finish my m.b.a...expecting a big change to happen in this year...... already half the year is getting over this month... probably the later half should bring me a biggest change in my life...........so let me wait and see.....

Subscribe to:
Posts (Atom)